காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து..!

காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து..!

Update: 2021-07-28 12:02 GMT

ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி பெற்றார்.

 ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இன்று காலை நடைபெற்ற பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் லீக் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் ஹாங்காங் வீராங்கனை நான் யி செங் ஆகிய இருவரும் மோதினர்.

இந்தப் போட்டியில் 21-9, 21-16 என்ற நேர் செட் கணக்கில் ஹாங்காங் வீராங்கனையை வீழ்த்தி பி.வி.சிந்து வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம், குரூப் ‘ஜே’ பிரிவில் முதலிடம் பிடித்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார் பி.வி.சிந்து.

Tags:    

Similar News