மின்னல் வேகத்தில் பாய்ந்த ரேஸ் பைக்!! கல்லூரி மாணவர்களால் ஏற்பட்ட பயங்கரம்!!

சாலையில் மின்னல் வேகத்தில் பாய்ந்த ரேஸ் பைக்!! கல்லூரி மாணவர்களால் ஏற்பட்ட பயங்கரம்!!

Update: 2020-03-08 14:08 GMT

சென்னையில் இரவு நேரங்களில் இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபடுகின்றனர். இதனால் அவ்வப்போது விபத்துகள் நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனையடுத்து ரேசில் ஈடுபடுவதை கட்டுப்படுத்த சென்னையில் முக்கியமான இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீசார் வாகன சோதனைகளில் ஈடுபடுகின்றனர்.

எனினும் அவ்வப்போது இளைஞர்கள் ரேசில் ஈடுபட்டு விபத்தில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், சென்னை அண்ணாசாலையில் பைக் ரேசில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 4 பேர் போலீசில் சிக்கினர்.

பைக் ரேசில் ஈடுபட்ட ஹரிஹரன், அனீப், கிஷோர், தருண் ஆகிய 4 பேரை தேனாம்பேட்டை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்த இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறது.

newstm.in

Tags:    

Similar News