இந்திய வீரர்கள் மீது இனவெறி தாக்குதல்... ஆஸ்திரேலியாவில் விசாரணை தீவிரம் !
இந்திய வீரர்கள் மீது இனவெறி தாக்குதல்... ஆஸ்திரேலியாவில் விசாரணை தீவிரம் !
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்தது. அப்போது ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணி, டி20 மற்றும் டெஸ்ட்தொடரை கைப்பற்றியது.
இதில், சிட்னியில் நடந்த 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர்கள் முகம்மது சிராஜ் மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் மீது பார்வையாளர்கள் இனவெறி கருத்துக்களை கூறியதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக கவனத்தை ஈர்க்கும் வகையில் 10 நிமிடங்கள் முகமது சிராஜ் பந்து வீசுவதை நிறுத்தினார். இது தொடர்பாக இந்திய கேப்டன் ரஹானே நடுவர்களிடம் புகார் தெரிவித்தார்.
இனவெறி புகாருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கடுமையான கண்டனங்களை ஏற்கெனவே பதிவு செய்தது. அதில், இனவெறியை தூண்டும் வகையில் செயல்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உறுதி அளித்தது.
இந்நிலையில் தற்போது இது தொடர்பாக பேட்டியளித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு மற்றும் ஊழல் தடுப்பு தலைவர் ஷான் கேரல், இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது இனவெறி கருத்துகள் தெரிவிக்கப்பட்டது உண்பை என்பதை கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஒப்புக்கொள்கிறது என தெரிவித்தார்.
மைதானத்தில் இருக்கும் சிசிடிவி காட்சகள், டிக்கெட் தரவுகள், பார்வையாளர்களுடனான நேர்காணல்கள் ஆகியவற்றை பார்த்து இனவெறி கருத்துகள் கூறியவர்கள் அடையாளம் காணப்பட்டார்கள். அவர்கள் குறித்த அனைத்து தகவல்களும் போலீஸாரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
அதன்படி முழுமையான விசாரணை முடிவடைந்ததும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் ஷான் கேரல் தெரிவித்துள்ளார்.
newstm.in