#BREAKING வரலாற்று சாதனை படைத்தார் ரஃபேல் நடால்!!

#BREAKING வரலாற்று சாதனை படைத்தார் ரஃபேல் நடால்!!

Update: 2022-01-30 20:07 GMT

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஒற்றையர் ஆடவர் பிரிவில் வென்றதை அடுத்து ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஒற்றையர் ஆடவர் பிரிவு இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் 6ஆம் நிலை வீரரான ரஃபேல் நடால், 2ஆம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் பெத்ததேவ் உடன் பலப்பரீட்சை நடத்தினார்.

மெல்பர்னில் 5 மணி நேரம் 24 நிமிடம் நடந்த இந்தப் போட்டியில் 2-6, 6-7(5), 6-4, 6-4, 7-5 என்ற கணக்கில் நடால் வென்றி பெற்றார்.இதன்மூலம் 21 ஆண்கள் ஒற்றையர் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்று ரஃபேல் நடால் உலக சாதனை படைத்துள்ளார்.


இதுவரை ரஃபேல் நடால், ரோஜர் ஃபெடெரர், நோவாக் ஜோகோவிச் ஆகியோர் தலா 20 ஆண்கள் ஒற்றையர் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றிருந்தனர். இந்நிலையில் 21ஆவது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற முதல் நபர் என்ற சாதனையை நடால் படைத்துள்ளார்.

newstm.in

Similar News