நடிகர் கமலுக்கு வில்லனாக ராகவா லாரன்ஸ்! பட்டைய கிளப்பும் அறிவிப்பு!
நடிகர் கமலுக்கு வில்லனாக ராகவா லாரன்ஸ்! பட்டைய கிளப்பும் அறிவிப்பு!
மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை இயக்கிய முண்ணனி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் . இவர் தற்போது இயக்க இருக்கும் படத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு விக்ரம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. கூடுதல் நடிகர், நடிகை தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக செய்திகள் உலா வருகின்றன. கதையும், கதாபாத்திரமும் லாரன்சுக்கு பிடித்துள்ளதால் அவர் நடிக்க சம்மதிப்பார் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் படங்களில் வில்லன் கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதை மாஸ்டர் போன்ற சில படங்கள் மூலம் அறியலாம். கமல்ஹாசன் தற்போது சட்டமன்ற தேர்தல் பிரசார பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாலும், லாரன்ஸ் ருத்ரன் படத்தில் நடித்து வருவதாலும் இந்தப் படம் . தேர்தல் முடிந்ததும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.