மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் உடலை தோளில் தூக்கிச் சென்ற ராகுல் காந்தி !!

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் உடலை தோளில் தூக்கிச் சென்ற ராகுல் காந்தி !!

Update: 2021-02-19 16:54 GMT

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் முன்னாள் மத்திய அமைச்சர் கேப்டன் சதீஸ் சர்மா. அண்மைக்காலமாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார். இந்த நிலையில் 73 வயதான இவர் உடல்நலப்பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்தார். அந்த வகையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர் திடீர் உடல்நலக்குறைவால் கடந்த புதன்கிழமை 17 ஆம் தேதி காலமானார்.

ராஜீவ்காந்தியின் நெருங்கிய நண்பரான இவர், நரசிம்ம ராவ் பிரதமராக இருந்த காலத்தில் 1993 ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரை மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சராக பதவி வகித்தார். 6 முறை எம்பியாக இருந்தவர்.

கேப்டன் சதீஷ் சர்மா உடலை இறுதி சடங்கிற்காக டெல்லி  எடுத்துச்செல்லப்பட்டது.அங்கு அவரது இறுதி மரியாதையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.அந்த வகையில் அவரது இறுதிச் சடங்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டார்.

இடுகாட்டிற்கு உடலை எடுத்துச் செல்லும்போது நான்கு பேரில் ஒருவராக ராகுல் காந்தி உடலைத் தூக்கிச் சென்றது காண்பவர் மனதை கசிய வைத்தது. அவரது உடலைத் தாங்கி இடுகாட்டிற்கு எடுத்துச் சென்று காங்கிரஸ் மூத்த தலைவருக்கு ராகுல் காந்தி இறுதி மரியாதை செலுத்தினார்.

Tags:    

Similar News