ஒரு கையால் தண்டால்... மாணவிகள் மத்தியில் ராகுல் காந்தி கலக்கல்!
ஒரு கையால் தண்டால்... மாணவிகள் மத்தியில் ராகுல் காந்தி கலக்கல்!
மூன்று நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள ராகுல் காந்தி தன்னுடைய செயல்பாடுகள் மூலம் மக்களை கவர்ந்து வருகிறார்.
முதல் நாள் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பரப்புரை மேற்கொண்ட ராகுல் எல்லோருடனும் சேர்ந்து தேநீர் அருந்தி மிக சுவையான டீ என தென்காசி டீயை பாராட்டினார். இந்நிலையில் இரண்டாவது நாளான நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் ராகுல் பரப்புரை மேற்கொண்டார்.
முதலில் முளகுமூடு செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகளிடையே கலந்துரையாடினார். அப்போது மாணவர்கள் ராகுலின் ஃபிட்னஸ் ரகசியத்தை கேட்டனர்.
அதற்கு ராகுல், ரன்னிங், நீச்சல், சைக்கிளிங் ஆகிய பயிற்சிகளை செய்கிறேன். ஜூடோ பயிற்சி மேற்கொள்கிறேன். அதிகமாக இனிப்பு சாப்பிடுவதில்லை. அரிசி, சப்பாத்தி அதிகமாக சாப்பிடுவதில்லை. அதிக புரதச்சத்து உள்ள உணவுகளை சாப்பிடுகிறேன் என்றார்.
அப்போது மாணவி ஒருவர் தண்டால் எடுக்க ராகுல் காந்தியும் தண்டால் எடுத்து அசத்தினார். அதனைத் தொடர்ந்து ஒரு கையால் தண்டால் எடுத்து ராகுல் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.
மேலும் மாணவர்களின் படிப்பு சார்ந்த கேள்விகளுக்கு ராகுல் பதில் அளித்தார். எல்லோரும் ரொம்பவும் சீரியஸாக பரப்புரை மேற்கொண்டு வரும் சூழலில் ராகுல் மிக இயல்பாக பிரச்சாரம் செய்வதால் தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.
newstm.in