ராகுல்காந்தியின் ட்விட்டர் கணக்கு முடக்கம்! காங்கிரஸ் கட்சிக்கு வந்த சோதனை!

ராகுல்காந்தியின் ட்விட்டர் கணக்கு முடக்கம்! காங்கிரஸ் கட்சிக்கு வந்த சோதனை!

Update: 2021-08-08 07:43 GMT

காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. 



இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், 'ராகுல்காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. அதனை மீட்டெடுக்கும் நடைமுறைகளையும், மறுசீரமைப்பிற்கும் உரிய செயல்முறை பின்பற்றப்படுகிறது.

அதுவரை, அவர் தனது மற்ற சமூக வலைத்தளங்களில் அனைவருடனும் தொடர்பில் இருப்பார். நமது மக்களுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி, அவர்களின் கோரிக்கைகளுக்காக போராடுவார். ஜெய் ஹிந்த்!' என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags:    

Similar News