சிறுவயதில் தேநீர் விற்ற ரயில் நிலையம்.. நவீன வசதிகளுடன் சீரமைப்பு.. திறப்பு விழாவில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி !!

சிறுவயதில் தேநீர் விற்ற ரயில் நிலையம்.. நவீன வசதிகளுடன் சீரமைப்பு.. திறப்பு விழாவில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி !!

Update: 2021-07-17 09:01 GMT

பிரதமர் நரேந்திர மோடி தான் சிறுவயதில் டீ விற்ற வாட்நகர் ரயில் நிலையத்தை பல்வேறு அம்சங்களுடன் மறுசீரமைக்கப்பட்டு திறந்து வைத்தார். 

குஜராத்தில் உள்ள வாட் நகர் ரயில் நிலையத்தில் மோடியின் தந்தை தாமோதர்தாஸ் மோடி தேநீர் கடை நடத்தி வந்தார். அப்போது இளம் வயதில் மோடி, தன் தந்தைக்கு உதவியாக பணிபுரிந்து வந்தார். தற்போது பல்வேறு அம்சங்களுடன் வாட்நகர்  ரயில் நிலையம் சீரமைக்கப்பட்டள்ளது.

நாட்டிலேயே ஐந்து நட்சத்திர ஹோட்டல் மற்றும் அதிநவீன வசதிகள் கொண்ட முதல் ரயில் நிலையம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. ஆன்லைன் மூலம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மறுசீரமைக்கப்பட்ட வாட்நகா் ரயில் நிலையத்தை பிரதமா் மோடி தொடக்கி வைத்தாா்.

பிரதமா் மோடி தனது சிறு வயதில் வாட்நகா் ரயில் நிலையத்தில் தனது தந்தை தாமோதா் தாஸின் தேநீா் கடையில் உதவியாளராகப் பணியாற்றி வந்தாா். இதை தனது குறிப்பிட்டுப் பேசிய பிரதமா் மோடி, வாட்நகா் நகா் ரயில் நிலையத்துடன் எனது நினைவுகள் ஏராளம் உள்ளன. புதிய ரயில் நிலையம் கவரும் வகையில் உள்ளது. வாட்நகா் - மொடேரா-படான் வழித்தடமும் அகல ரயில்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. அவற்றை பாா்வையிட ஆவளாக உள்ளேன் என கூறினார்.

ரயில் நிலையங்களை மேம்படுத்துவது சேவைக்காக மட்டுமல்ல, நமது சொத்தாகவும் இருப்பது இன்றைய நிகழ்வு மூலம் தெளிவாகி உள்ளதாக குற்பிப்டடார். விமான நிலையங்களைப் போன்று ரயில் நிலையங்களிலும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் கட்டலாம் என்பதற்கு காந்திநகா் ரயில்நிலையம் உதாரணம் என்றாா்.

ரூ. 790 கோடியில் கட்டப்பட்டுள்ள ஐந்து அடுக்குமாடி காந்திநகா் ரயில் நிலைய ஐந்து நட்சத்திர ஹோட்டலில் 318 அறைகள் உள்ளன. கடந்த 2017 ஜனவரி மாதம் இந்த திட்டத்துக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டியிருந்தாா். தற்போது அவை திறக்கப்பட்டுள்ளது. ரூ.8.5 கோடியில் பாரம்பரிய நயத்துடன் அமைந்த ரயில் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.

newstm.in

Tags:    

Similar News