கடலோர மாவட்டங்களுக்கு இன்று மழை எச்சரிக்கை.. சென்னைக்கும் வாய்ப்பு !!
கடலோர மாவட்டங்களுக்கு இன்று மழை எச்சரிக்கை.. சென்னைக்கும் வாய்ப்பு !!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்து பெய்து வந்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதன்காரணமாக பல இடங்களில் பெரு வெள்ளம் ஏற்பட்டது. அதன் பின்னர் இந்த மாத ஆரம்பத்தில் இருந்து மழை குறையத்தொடங்கி, பெரும்பாலான இடங்களில் பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக வறண்ட வானிலையே நிலவுகிறது.
இந்த நிலையில் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, வருகிற 1ஆம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக புதிய தகவலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று (புதன்கிழமை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை (வியாழக்கிழமை) கடலோர மாவட்டங்கள் மற்றும் அவற்றை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுச்சேரியில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. நாளை மறுதினமும் (வெள்ளிக்கிழமை), வரும் 1ஆம் தேதியும் (சனிக்கிழமை) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
இதுதவிர மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் ஏனைய உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
newstm.in