இந்தியா முழுவதும் மழைநீர் சேகரிப்பு !பிரதமர் மோடி !
இந்தியா முழுவதும் மழைநீர் சேகரிப்பு !பிரதமர் மோடி !
உலக தண்ணீர் தினத்தை சிறப்பிக்கும் விதமாக இந்தியா முழுவதும் மழைநீர் சேகரிப்பு பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார். அதில் காணொலி மூலம் ராஜஸ்தான், உத்தரகாண்ட், கர்நாடகா, மராட்டியம், குஜராத் ஆகிய மாநிலங்களை சேர்ந்த ஊராட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்று மழைநீர் சேகரிப்பு அனுபவங்களை பிரதமர் மோடியுடன் பகிர்ந்து கொண்டனர்.
மேலும் பிரதமர் மோடி முன்னிலையில், கென்-பெட்வா இணைப்பு திட்டம் மற்றும் நதிநீர் இணைப்புக்கான தேசிய முன்னோக்கு திட்டத்தின் முதல் திட்டத்தில் மத்திய பிரதேசம், உத்தரபிரதேச முதலமைச்சர்கள் கையெழுத்திட்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி இந்தியாவில் பெய்யும் துளி கூட வீணாக்காமல் மழைநீரை இந்தியா சிறப்பாக நிர்வகித்தால், நாடு நிலத்தடி நீரை சார்ந்திருக்கும் நிலை குறையும். எனவே மழைநீர் சேகரிப்பு முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.
அதுவரை 100 நாள் திட்டமாக செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கான ஒவ்வொரு காசும் மழைநீர் சேகரிப்பு திட்டங்களுக்கு செலவிடப்பட வேண்டும். இந்தியாவின் வளர்ச்சிக்கு இணையாக தண்ணீர் பிரச்சினைக்கான சவால்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பொதுமக்கள் தண்ணீரை வரும் தலைமுறையினருக்காக மிச்சம் வைத்து நியாயமுறையில் தண்ணீரை உபயோகிக்க வேண்டும்.இதனைச் சார்ந்தே நாட்டின் தன்னிறைவு இருக்கிறது. மழைநீர் சேகரிப்பு மட்டுமின்றி நதிநீர் மேலாண்மை குறித்தும் பல ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.
தண்ணீரை பாதுகாக்கும் உறுதிமொழி நாடு முழுவதும் பிரசாரமாக மேற்கொள்ளப்படுகிறது. இந்த உறுதிமொழியை ஒவ்வொருவரும் தங்கள் உறுதிமொழியாக எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் மோடி பேசியுள்ளார்.பிரதமர் மோடி தொடங்கி வைத்த இந்த மழைநீர் சேகரிப்பு பிரசாரம் நாடு முழுவதும் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் 2021 நவம்பர் 30 வரை மேற்கொள்ளப்படும். அடிமட்ட நிலையில் இருந்து அனைத்து மட்டங்களிலும் அனைத்து பிரிவு மக்களும் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
newstm.in