ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7.5 கோடி நிதியுதவி.. கொரோனாவை வீழ்த்த உதவி !

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7.5 கோடி நிதியுதவி.. கொரோனாவை வீழ்த்த உதவி !

Update: 2021-04-29 17:34 GMT

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2ஆவது அலை மிகத் தீவிரமான பரவி வருகிறது. மருத்துவ ஆக்சிஜன், மருந்துகள் தட்டுப்பாடு அதிக அளவில் உள்ளது. இதனால் வெளிநாடுகள் ஆக்சிஜன் மற்றும் மருந்துகளை அனுப்பி வருகின்றன. அதேபோல் பல்வேறு நாடுகள், பிரபலங்கள் உதவி வருகின்றனர். 

தற்போது ஐபிஎல் போட்டிகள் மிகுந்த பாதுகாப்பு வளையத்திற்குள் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் கொரோனா அதிகரித்து வருவது அவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. வீரர்கள் சிலர் அடுத்தடுத்து ஐபிஎல் தொடரில் இருந்து விலகி வருகின்றனர். 

இதனிடையே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் 50 ஆயிரம் அமெரிக்க டாலரை ஆக்சிஜன் வாங்கி, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நன்கொடையாக வழங்கினார். அதேபோல் ஓய்வுபெற்ற வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீயும் நன்கொடை வழங்கியுள்ளார். இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இக்கட்டான சூழ்நிலையில் சிக்கித் தவிக்கும் இந்தியாவிற்கு 7.5 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளது.

அந்த அணியின் வீரர்கள், பயிற்சியாளர், அணி நிர்வாகிகள் மற்றும் அணியின் உரிமையாளர்கள் என அனைவரும் அணியாக இணைந்து இந்த நிதியில் பங்களிப்பு செய்துள்ளனர்.  
அதோடு ராஜஸ்தான் ராயல்ஸ் அறக்கட்டளை மற்றும் பிரிட்டிஷ் ஏசியன் டிரஸ்ட்டும் இதற்கு உதவியுள்ளது. இந்த நிதியை கொண்டு இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு உதவ உள்ளனர்.

குறிப்பாக தற்போதைய நெருக்கடி சூழலை சமாளிக்கவும், ஆக்சிஜன் தேவையை சமாளிக்கவும் திட்டமிட்டுள்ளதாம். குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் அதிக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 


newstm.in

Tags:    

Similar News