தப்பியோடும் ராஜேந்திர பாலாஜி.. மேலும் ஒரு பண மோசடி புகார் அளித்த பெண் !
தப்பியோடும் ராஜேந்திர பாலாஜி.. மேலும் ஒரு பண மோசடி புகார் அளித்த பெண் !
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு பண மோசடி புகார் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சி ஏற்பட்டப்பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கொஞ்சம் கலக்கத்தில் இருக்கின்றனர்கள் என்றே கூறலாம். ஏற்கனவே முறைகேடு, சொத்துகுவிப்பு புகார்களில் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகள், தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அவ்வப்போது சோதனை நடத்தி வருகிறது.
இதற்கு அடுத்தகட்டமாக கைது நடவடிக்கைக்கு அஞ்சை தலைமறைவாக இருக்கிறார் அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. முன்னதாக ராஜேந்திர பாலாஜி, வேலை வாங்கி தருவதாக மூன்று கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக உள்ளிட்ட புகாரில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி அவரின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
அதைத்தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி கடந்த 17ஆம் தேதி முதல் தலைமறைவாக உள்ளதாக விருதுநகர் காவல்துறை தெரிவித்துள்ளது. விருதுநகரில் நடைபெற்ற அதிமுக-வின் கண்டன ஆர்ப்பாட்டத்தை அவசர அவசரமாக முடித்துக்கொண்டு வெவ்வேறு கார்களில் அவர் மாறிமாறி சென்றுள்ளதாக கூறி, அவரை பிடிக்க 8 தனிப்படைகள் காவல்துறை தரப்பில் அமைக்கப்பட்டுள்ளன.
பெங்களூரு, சென்னை, கேரளா போன்ற பல்லேறு பகுதிகளில் அவரைத் தேடிவருகின்றனர். தற்போது அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸூம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது ராஜேந்திர பாலாஜி மீது பெண் ஒருவர் மேலும் ஒரு புகார் அளித்துள்ளார். சாத்தூரில் சத்துணவில் வேலை வாங்கி தருவதாக கூறி, ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் எஸ்.பி.க்கு வந்த புகாரில் முகாந்திரம் உள்ளாதா என காவல்துறை ஆய்வு செய்து வருகிறது. இதனால் ராஜேந்திர பாலாஜிக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
newstm.in