டிஸ்கவரி சேனலின் மெகா ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்றான 'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சியில் பிரதமரை மோடி கலந்து கொண்டு கலக்கிய நிலையில், தற்போது நடிகர் ரஜினிகாந்த்  கலந்து கொள்கிறார். இதற்கான படப்பிடிப்பில் கலந்துக் கொள்வதற்காக ரஜினிகாந்த் மைசூர் புறப்பட்டு சென்றுள்ளார். 

உலகப் புகழ் பெற்ற டிஸ்கவரி சேனலின் 'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சியின் ஹீரோ பியர் கிரில்ஸ், ஒவ்வொரு நிகழ்ச்சிகளின் மூலமாகவும் அடர்ந்த வனப்பகுதிகளில் ஆபத்தான சூழ்நிலைகளில் எப்படி உயிர் பிழைத்திருப்பது, அங்கிருந்து எப்படி மீண்டு வருவது என்று மக்களுக்குக் கற்றுத் தருகிறார்.

சில பல மாதங்களுக்கு முன் உத்தரகாண்ட் மாநிலம் ஜிம் கார்பெட் தேசிய வன உயிரியல் பூங்காவில் பிரதமர் மோடி, வனவிலங்குப் பாதுகாப்பை மையக் கருத்தாக கொண்டு, இந்திய பிரதமர் மோடி, உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜிம்கார்பெட் தேசிய வன உயிரியல் பூங்காவில் நடைப்பெற்ற படப்பிடிப்பில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பியர் கிரில்ஸுடன் இணைந்து பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் கலந்து கொள்வது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பந்திபுரா புலிகள் காப்பகத்தில் தற்போது இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. இன்றும், நாளையும் நடைப்பெற இருக்கும் இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் ஆர்வமுடன் கலந்து வருகிறார்.

newstm.in

newstm.in

Tags: