புதிய கட்சி.. ரஜினிகாந்த் இன்று முக்கிய முடிவு அறிவிக்க வாய்ப்பு!!
புதிய கட்சி.. ரஜினிகாந்த் இன்று முக்கிய முடிவு அறிவிக்க வாய்ப்பு!!
ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களுக்கான கூட்டம் இன்று சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெறுகிறது. அப்போது அரசியல் வருகை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
சிஏஏ, என்பிஆர் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் கருத்து தெரிவித்தார். இதனை பல்வேறு தரப்பினர் விமர்சித்த நிலையில், இது தொடர்பாக இஸ்லாமிய அமைப்பினரை சந்தித்து பேச தயாராக இருப்பதாக ரஜினிகாந்த் கூறியிருந்தார். அதன்பேரில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று அவரை உலமா சபை குருக்கள் சந்தித்துப் பேசி இருந்தார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தை சேர்ந்த மாவட்டச் செயலாளர்களை இன்று காலை 10 மணிக்கு சந்திக்கிறார். இச்சந்திப்பு மூன்றாவது முறையாக நடைபெறும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டமாகும். இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடி சில முக்கிய பிரச்னைகள் குறித்து ரஜினிகாந்த் விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் இந்த கூட்டத்தில் இந்தக் கூட்டத்தில், புதிய அரசியல் கட்சித் தொடங்குவது குறித்து மாவட்டச் செயலாளா்களுடன் நடிகா் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தான் அரசியலுக்கு வருவது உறுதி என ஏற்கெனவே நடிகா் ரஜினிகாந்த் திட்டவட்டமாக அறிவித்திருந்தார். இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், மன்றத்தின் மாவட்டச் செயலாளா்களை சந்திக்க உள்ளது முக்கியதுவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
newstm.in