வழக்கிலிருந்து தப்பித்த ரஜினிகாந்த்

துக்ளக் இதழின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் நடிகர் ரஜினிக்கு எதிராக பல்வேறு இயக்கங்களை சேர்ந்தவர்கள் குரல் கொடுத்தனர். பலகட்ட போராட்டங்களும் நடைபெற்றது. ரஜினி ஆதரவு, எதிர்ப்பு என இரண்டு தரப்பினர் கருத்துகளை தெரிவித்து வந்தனர்.;

Update: 2020-03-10 23:00 GMT

பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்ய கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.


துக்ளக் இதழின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் நடிகர் ரஜினிக்கு எதிராக பல்வேறு இயக்கங்களை சேர்ந்தவர்கள் குரல் கொடுத்தனர். பலகட்ட போராட்டங்களும் நடைபெற்றது. ரஜினி ஆதரவு, எதிர்ப்பு என இரண்டு தரப்பினர் கருத்துகளை தெரிவித்து வந்தனர். 


ஆனால் இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்க முடியாது என்று ரஜினிகாந்த் திட்டவிட்டமாக தெரிவித்தார். இந்நிலையில் பெரியார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக திராவிடர் விடுதலை கழகம் சார்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று முறையிடப்பட்டது. இந்த வழக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். 
 

newstm.in

Tags:    

Similar News