ரஜினிகாந்த் வீட்டுக்கு இனி பாதுகாப்பு கிடையாது!! போலீஸ் நடவடிக்கை!!

ரஜினிகாந்த் வீட்டுக்கு இனி பாதுகாப்பு கிடையாது!! போலீஸ் நடவடிக்கை!!

Update: 2020-03-02 13:53 GMT

சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு நேற்று முதல் விலக்கிக் கொள்ளப்பட்டது. 
துக்ளக் ஆண்டு விழாவில் பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியதால் பெரியார் அமைப்புகள் ரஜினி இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயற்சித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் இல்லம் அமைந்துள்ள போயஸ் கார்டன் பகுதியிலும், அவருடைய இல்லம் அருகேயும் சுழற்சி முறையில் 10 ஆயுதப்படை போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு வழங்கி வந்தனர்.

இந்த நிலையில் அண்மையில் தனது இல்லத்திற்கு வழங்கப்படும் பாதுகாப்பை விலக்கிக்கொள்ள போலீசாரிடம் ரஜினிகாந்த் கோரிக்கை வைத்தார்.

இதனையடுத்து நேற்று காலை 11 மணி அளவில் நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் திருநாவுக்கரசு நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து இது குறித்து ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் இல்லத்திற்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது

newstm.in

Tags:    

Similar News