ராஜ்யசபா எம்.பி. ஆகிறார் நடிகை குஷ்பு! பாஜகவின் மெகா ப்ளான்! அண்ணாமலைக்கு கல்தா!
ராஜ்யசபா எம்.பி. ஆகிறார் நடிகை குஷ்பு! பாஜகவின் மெகா ப்ளான்! அண்ணாமலைக்கு கல்தா!
குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் மற்றும் பாஜக-வின் அபய் பரத்வாஜ் ஆகியோர் அண்மையில் மரணம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து, ராஜ்யசபாவில் இரண்டு இடங்கள் காலியாக உள்ளது.இதே போல் அசாம் மாநிலத்தில் போடோ மக்கள் முன்னணி கட்சியின் பிஸ்வஜித் தைமேரி, தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். இதனால், மேலும் ஒரு இடம் ராஜ்யசபாவில் காலியாக உள்ளது.
இந்நிலையில், ராஜ்யசபாவில் காலியாக உள்ள இந்த மூன்று இடங்களுக்கான இடைத்தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பாக்கப்பட்டது. இந்நிலையில், வரும் மார்ச் மாதம் 1-ம் தேதி ராஜ்யசபாவில் காலியாக உள்ள இந்த மூன்று இடங்களுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வகமாக வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் வரும் மே மற்றும் ஜூன் மாதம் நிறைவுபெற உள்ளது. இதனால் இந்த 5 மாநிலங்களிலும் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், தேர்தல் தேதி அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகும் என கூறப்படுகிறது.
அசாம் மாநிலத்தில் தற்போது பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. மேற்கு வங்காளத்தில் ஆளுங்கட்சியாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற 3 மாநிலங்களிலும் பா.ஜ.க கூட்டணி கட்சிகளுடன் போட்டியிட உள்ளது.
குறிப்பாக, கடந்த 2016 -ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அசாம் மாநிலத்தில் பாஜக.முதல் முறையாக வென்று ஆட்சி அமைத்தது.அடுத்து, 2019-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர், இடதுசாரிக் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு முக்கிய எதிர்க்கட்சியாக விளங்கி வருகிறது பாஜக.
தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் பாஜக தனிப்பட்ட முறையில் வலுவான கட்சியாக இன்னும் உருவாகவில்லை. இதனால், தமிழகத்தில் தற்போது ஆளும் அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும் என தமிழக பாஜக தலைவர்களும், டெல்லி பாஜக தலைவர்களும் வலியுறுத்தி வந்தனர்.
நடிகர் ரஜினிகாந்துக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி கொடுத்து, அவரை தங்கள் பக்கம் இழுக்க பாஜக திட்டமிட்டது. அதற்கும் ரஜினி மறுத்துவிட்டார். எம்பி பதவியை ரஜினிகாந்த் மறுக்கும் பட்சத்தில், நடிகை குஷ்பூ அல்லது அண்ணாமலை ஐபிஎஸ் ஆகியோரில் ஒருவருக்கு அந்த பதவியை வழங்க டெல்லி பாஜக. முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த பட்டியலில், பி.ஜே.பி தேசிய மகளிரணி தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் வானதி சீனிவாசன், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தமிழக விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவரும், திருச்சி தினமலர் ஆசிரியருமான கோபால்ஜி, நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, பாஜக - அதிமுக கூட்டணியில் உள்ள புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மைத்துனர் சுதீஷ் உள்ளியோரும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதில் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்பதை மோடியும், அமித்ஷா மட்டுமே முடிவு செய்வார்கள்.
தற்போது தமிழகத்திற்கு எம்பி பதவி கொடுத்து முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் தமிழக மக்களை தங்கள் பக்கம் திரும்பி பார்க்க வைக்காலம் என்றும், அதன் மூலம் வரும் தேர்தலில் ஆட்சி அமைத்துவிடலாம் என்றும் டெல்லி பாஜக கணக்கு போட்டு காய் நகர்த்தி வருகின்றதாம். மக்களிடையே கோயில் கட்டும் அளவிற்கு அதிக செல்வாக்கு, ரஜினி கைவிரித்த நிலையில், சினிமா கவர்ச்சி என்று தேர்தலுக்கு முன்பாகவே குஷ்புவுக்கு பதவி கொடுத்தால், பிரச்சாரத்திற்கு பெரிய அளவில் அவரைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பலே சிபாரிசுடன் டெல்லிக்கு குஷ்பு பெயரை டிக் அடித்து அனுப்பியிருக்கிறார்களாம் தமிழக பாஜக பெருந்தலைகள்!
எத்தனை கட்சி மாறினாலும், பாஜக மட்டுமே குஷ்புவுக்கு உரிய பதவி கொடுத்து அழகு பார்க்க போகுது என்று இப்போதிலிருந்தே சட்டசபைத் தேர்தலுக்கு தயாராக குஷ்புவுக்கு கொம்பு சீவி விடும் வேலைகளும் துவங்கி விட்டது என்கிறார்கள். அதன் வெளிப்பாடு தான், இத்தனை வருடங்களாக மெளனாக இருந்து வந்த குஷ்பு, என் வீட்டில் கல்லெறியச் சொன்னதே ஸ்டாலின் தான் என்று மு.க. ஸ்டாலினுக்கு எதிராகவும் பேசத் துவங்கியிருக்கிறார். தேர்தல் நெருங்க நெருங்க குஷ்புவின் பேச்சில் இன்னும் அனல் அதிகமிருக்கும் என்கிறார்கள்.