ஒரு பெண்ணுக்கு நம்பிக்கை அளித்து, ஆசை வார்த்தைகள் கூறி  உடலுறவில் ஈடுபட்டாலும் அது பாலியல் வன்கொடுமைக்கு சமம் என்று மும்பை உயர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.


மும்பை நீதிமன்றத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட ஒருவரை விடுவிக்க கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். பொய்யான உறுதிமொழி கொடுத்ததால் நம்பிக்கையின் அடிப்படையில் உடலுறவு கொள்ள சம்மதம் தெரிவித்ததாக அப்பெண் கூறினார். 


மேலும் ஆசை வார்த்தைகள் கூறி மயக்கி அந்த நபர் உடலுறவில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர் மீது ஆழ்ந்த அன்பு இருந்ததால் அந்த பெண் உறவில் ஈடுபடவில்லை என்று தெரிவித்த நீதிபதிகள், இதனை உறவுக்குள் நுழைவதற்கான ஒரு சோதனையாகவே அந்த பெண் கருதியுள்ளார் என்றனர். 
மேலும், குற்றம்சாட்டப்பட்ட நபர் அந்த பெண் நம்பும் அளவுக்கு உத்தரவாதங்கள் அளித்ததால், விடுவிக்கக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அதனால் காதலர்கள், பழகினோம், உறவு கொண்டோம் என்று எளிதாக கூறிவிடமுடியாது. 

newstm.in

Tags: