வெளிநாட்டுப் பெண்ணை அடைத்து வைத்து பலாத்காரம்! பெங்களூரில் பரபரப்பு!

வங்கதேச பெண்ணை 5 நாள் சிறை வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம்.. வேலை வாங்கித் தருவதாக கூறி கொடூரம்

Update: 2020-01-29 20:43 GMT

வேலை வாங்கி தருவதாக அழைத்து வந்து வங்கதேச பெண்ணை 5 நாட்கள் சிறை வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த காமுகர்கள் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். வங்கதேசத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் குடும்ப சூழல் காரணமாக உறவினர் ஒருவரின் மூலம் பெங்களூருக்கு பணிக்கு வந்துள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவரின் முகவரியை அந்த உறவினர் கொடுத்து அனுப்பியுள்ளார். முகவரி மூலம் உறவினர் கூறிய பெண்ணை சந்தித்தார். அப்பெண் வங்கதேச பெண்ணை தனது ஆண் நண்பர் ஒருவரின் வீட்டில் கொண்டு விட்டார்.

அப்போது இங்கே தங்கிக்கொள் அதிக வரும் வருமானம் கிடைக்கும் வகையில் வேலை வாங்கி தருவதாக கூறினார். இதை நம்பி அங்கு தங்கிய வங்கதேசத்து பெண்ணை அன்று இரவே அந்நபர் பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் தனது நண்பர்கள் 4 பேரை தொலைப்பேசி மூலம் வரவழைத்தார். அவர்களும் அப்பெண்ணை அடுத்தடுத்து பலாத்காரம் செய்துள்ளனர். தொடர்ந்து 5 நாட்கள் இரவு பகல் என்று இந்த கொடூர செயலில் அவர்கள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாதபோது, அங்கிருந்து தப்பியோடி பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் தஞ்சம் அடைந்தார். பின்னர் அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து காமுகர்கள் 5 பேர் மற்றும் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய பெண்ணையும் தேடி வருகின்றனர்.

newstm.in

Tags:    

Similar News