இந்திய விமானப்படையில் இணைந்தது ரஃபேல்! பாதுகாப்பு பலத்தின் அடுத்த உச்சம் !!

இந்திய விமானப்படையில் இணைந்தது ரஃபேல்! பாதுகாப்பு பலத்தின் அடுத்த உச்சம் !!

Update: 2020-09-10 15:25 GMT

இந்திய விமானப்படையின் பலத்தை அதிகரிக்கும்  வகையில் பிரான்ஸில் இருந்து வாங்கப்பட்ட ரஃபேல் போர் விமானங்கள் முறைப்படி இன்று இந்திய விமானப் படையில் இணைக்கப்பட்டன. 

அம்பாலா விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய - பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்றனர்.

பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடமிருந்து 36 ரபேல் ரக விமானங்களை வாங்க ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, அதில் 5 விமானங்கள் கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதி, இ்ந்தியாவுக்கு வந்து சேர்ந்தன.

ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படைத்தளத்திற்கு வந்தடைந்த அந்த போர் விமானங்கள், இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டுவிட்டன. அவற்றை முறைப்படி விமானப்படையில் இணைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.


முன்னதாக ரஃபேல் விமானங்கள் இணைக்கப்படுவதற்கு முன், அனைத்து மத முறைப்படி விமானங்களுக்கு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் ரஃபேல் விமானங்கள் விண்ணில் சாகசங்கள் நிகழ்த்தின. அதனைத் தொடர்ந்து ரஃபேல் விமானங்களுக்கு தண்ணீரி பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.


newstm.in 

Tags:    

Similar News