கிரிக்கெட்டிலிருந்து ரவீந்திர ஜடேஜா ஓய்வு?- ரசிகர்கள் அதிர்ச்சி !

கிரிக்கெட்டிலிருந்து ரவீந்திர ஜடேஜா ஓய்வு?- ரசிகர்கள் அதிர்ச்சி !

Update: 2021-12-15 09:45 GMT

டெஸ்ட் கிரிக்கெட்டில் செம பார்மில் இருந்து நன்றாக ஆடிவரும் ரவீந்திர ஜடேஜா ஓய்வு பெற திட்டமிட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணிக்கு கிடைத்திருக்கும் திறமை வாய்ந்த ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. 33 வயதாகும் ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 57 டெஸ்ட் போட்டிகளில் 2,195 ரன்களை 33.76 என்ற சராசரியில் எடுத்துள்ளார். பந்துவீச்சில் 232 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இந்தியக் குழிப்பிட்ச்களின் தாதா பவுலர் ஜடேஜா என்றே இவர் அழைக்கப்படுகிறார்.

டெஸ்ட் போட்டிகளில் 44 டெஸ்ட்களில் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் இடது கை பவுலர் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். பேட்டிங், பவுலிங் மட்டுமல்லாமல் பீல்டிங்கிலும் அசத்தக்கூடியவர் ஜடேஜா.

இந்நிலையில் ஜடேஜாவின் சக வீரர் ஒருவர் தைனிக் ஜாக்ரன் பத்திரிகையில் கூறும்போது, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஜடேஜா விரைவில் குட்பை சொல்வார் என்றார். நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியின் போது முன் கையில் அடிபட்டு வீங்கியது. இதனால் கடைசி டெஸ்ட் போட்டியில் உட்கார்ந்தார்.

இதே பிரச்சனையில்தான் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் ஜடேஜா இல்லை. ரசிகர்கள் இந்த ராக்-ஸ்டார் ஜடேஜாவை விரைவில் களத்தில் எதிர்பார்க்க அவரோ டெஸ்ட் கிரிக்கெட் பக்கம் இனி தலை வைத்துப் படுக்க மாட்டேன் என்று கூறப்போகிறார் என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரவியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

ஆனால் ஜடேஜா தரப்பிலிருந்து இது தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஒருநாள் மற்றும் இருவது ஓவர் போட்டியில் விளையாடுவார். ஜடேஜா தற்போது ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார்.

newstm.in

Similar News