ஆன்லைனில் அதிகரிக்கும் மோசடிகள்.. மக்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய எச்சரிக்கை !!

ஆன்லைனில் அதிகரிக்கும் மோசடிகள்.. மக்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய எச்சரிக்கை !!

Update: 2022-01-30 06:45 GMT

இணைய மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் பாதுகாப்பான 'டிஜிட்டல் பேங்கிங்' நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

நவீனமயமாகிவிட்ட இன்றைய காலக்கட்டத்தில் அனைத்தும் டிஜிட்டல் முறையில் என்ற வழக்கம் பரவிவிட்டது. ஒற்றை செல்போனால் வங்கிக்கு செல்லாமல் பணப்பரிமாற்றம் என அனைத்தையும் செய்துவிடும்  நிலையை எட்டிவிட்டோம். இன்றைய காலக்கட்டத்தில் அவை எத்தகைய நன்மை அளிக்கிறதோ அதேஅளவுக்கு அதில் ஆபத்தும், தீமைகளும் உள்ளது. 

செல்போன் அழைப்புகளில் உங்கள் வங்கி அக்கவுண்ட் வேலிடிட்டி முடியப்போகிறது, ஏடிஎம் காலவாதியாகிறது என பொய் பேசி, முகம் தெரியாதவர்கள் வங்கி தகவல்களை பெறுகின்றனர். பின்னர்  சில நிமிடங்களில் பணமும் காணாமல் போகிறது. இதுபோன்ற குற்றங்கள் அதிகரித்து வருவதால் மக்களுக்கும் வங்கி வாடிக்கையாளர்களுக்கும் ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

சமூக ஊடக நுட்பங்கள், தொலைபேசி அழைப்புகள் என பலவற்றின் வாயிலாக மக்களை ஏமாற்றும் போக்கு சமீப காலமாக அதிகரித்துள்ளது.எனவே டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு, பொதுமக்களை ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. 
 
மக்கள் போலியான தொலைபேசி அழைப்புகள், தெரியாத லிங்குகள், தவறான அறிவிப்பு செய்திகள், அங்கீகரிக்கப்படாத கியு.ஆர்., குறியீடுகள் போன்றவை குறித்து மிகவும் விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. 

ஹேக்கர்கள், வங்கி கணக்குகள் சம்பந்தமான அடையாள எண், பாஸ்வேர்டு, டெபிட், கிரெடிட் கார்டுகள் குறித்த தகவல்கள் போன்றவற்றை அறிந்து கொள்வதற்காக, பல்வேறு விதமாக தங்களது மாற்றி அமைத்து பொதுமக்களை ஏமாற்ற முயற்சி செய்து வருகின்றனர். எனவே, டிஜிட்டல் பேங்கிங் வாயிலாக பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது, இழப்பை தவிர்க்க, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

newstm.in

Tags:    

Similar News