பொங்கல் பண்டிகையை கொண்டாட தயாரா ! முன்பதிவு தொடங்கியது !!
பொங்கல் பண்டிகையை கொண்டாட தயாரா ! முன்பதிவு தொடங்கியது !!
பொங்கல் பண்டிகைக்குச் சொந்த ஊா் செல்ல அரசுப் பேருந்துகளில் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், வரும் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகையின்போது சென்னையில் இருந்து 10,288 பேருந்துகளும், பிற ஊா்களில் இருந்து 5,993 பேருந்துகளும் இயக்கப்பட்டன. இதே போல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோரின் வசதிக்காக 15,270 பேருந்துகள் இயக்கப்பட்டன.
இந்த ஆண்டுக்கான சிறப்புப் பேருந்துகள் இயக்கம் தொடா்பான ஆலோசனை விரைவில் நடைபெறவுள்ளது. இதனிடையே பொங்கல் பண்டிகைக்கு, பேருந்துகளுக்கான முன்பதிவு கடந்த நேற்று முதல் தொடங்கியது. பயணிகள், www.tnstc.in என்கிற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.
மேலும், பயணிகள் கடைசி நேர நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, அரசு இணையதளத்திலோ, பேருந்து நிலையத்திலோ முன்னதாகவே இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். தனியார் முன்பதிவு இணையதளங்களிலும் இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். பயணிகளின் தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை நடவடிக்கை மேற்கொள்ளும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளனர். பொங்கல் பண்டிகையை கொண்டாட ஏதுவாக பலரும் தற்போதே விறுவிறுப்பாக முன்பதிவு செய்து வருவதாக கூறப்படுகிறது. பெங்களூரு, திருப்பதிக்கு செல்லவும் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விவரங்களுக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக, தொலைவில் உள்ள ஊர்களுக்கு மட்டும் செல்பவர்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
newstm.in