தடைகளை நீக்க தயார்! இறங்கி வந்தது அமெரிக்கா!
தடைகளை நீக்க தயார்! இறங்கி வந்தது அமெரிக்கா!
ஈரானுக்கு எதிராக அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் 2015ல் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி நாடுகள் இணைந்து கையெழுத்திட்டுள்ளன. முழுமையான கூட்டு செயல்திட்டம் என்றழைக்கப்படுகிற இந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் ஈரான் அணு ஆயுத திட்டங்களை கைவிடவும் , யுரேனியம் கையிருப்பை 15 ஆண்டுகளில் குறைக்கவும் வழிவகை செய்யப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா கையெழுத்திட்டுள்ளார். , அவருக்கு பின்னர் வந்த டிரம்ப் இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார். இப்போது அமெரிக்காவில் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள பைடன் அணுசக்தி தவிர்ப்பு ஒப்பந்தத்துக்கு ஒவ்வாத வகையில் ஈரான் மீது போடப்பட்ட பொருளாதார தடைகளை விலக்கிக்கொள்ள அமெரிக்கா தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். வியன்னாவில் அமெரிக்காவும், ஈரானும் திரைமறைவு பேச்சுவார்த்தையில் பங்கேற்று வருகின்றன.இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது உலக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.