கூடா நட்பு.. நண்பரின் மனைவியை நகை, பணத்துடன் இழுத்துச் சென்ற ரியல் எஸ்டேட் தரகர்..!

women eloped real estate broker who are friend her husband

Update: 2020-01-29 12:32 GMT

2 பெண் குழந்தைகள், வீட்டிலிருந்த ரூ.5 லட்சம், 20 சவரன் நகைகளை அள்ளிக்கொண்டு ரியல் எஸ்டேட் தரகரோடு பெண் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடுத்த போரூர் பகுதியில் கேசவன் - கனகலட்சுமி தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகனும், 6 மற்றும் 4-ம் வகுப்புகளில் படிக்கும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். அப்பகுதியில் டீ கடை நடத்தி வரும் கேசவன் தினமும் அதிகாலை 4 மணிக்கு கடையைத் திறந்துவிட்டு இரவு 11 மணிக்கு மேல்தான் கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு செல்வார். 
இந்நிலையில், மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த முல்லை விவேக் என்பவருடன் கேசவனுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. ரியஸ் எஸ்டேட் தரகரான விவேக், கேசவனுக்கு நிலம் வாங்கித் தருவதாக கூறியுள்ளார். இதன் அடிப்படையில் இருவரும் பழகி வந்துள்ளனர். கேசவன் தினமும், மதிய உணவுக்காக வீட்டுக்குச் சென்றுவிட்டு வருவது வழக்கம். அந்த நேரத்தில், மனைவி கனகலட்சுமி டீ கடை வியாபாரத்தை கவனித்து வந்துள்ளார்.

கேசவன் வீட்டிக்குச் செல்லும் நேரங்களில் அங்கு வரும் முல்லை விவேக் - கனகலட்சுமி இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த நட்பு நெருக்கமாகியுள்ளது. கனகலட்சுமிக்கு பரிசுகள் வாங்கிக் கொடுப்பது, ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்து கொடுப்பது என மேலும் நெருங்கியுள்ளார். இதனை கேள்விப்பட்ட கேசவன் இருவரையும் கண்டித்துள்ளார். இந்நிலையில், கடையை அடைத்துவிட்டு இரவில் வீட்டிற்கு சென்ற கேசவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு மனைவியும் குழந்தைகளும் இல்லாததைக் கண்டு குழப்பமடைந்து அக்கம் பக்கத்திலும், உறவினர் வீடுகளிலும் தேடியுள்ளார். 

மனைவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. மேலும் வீட்டிலிருந்த 5 லட்சம் ரூபாய் பணம் 20 சவரன் நகைகள் ஆகியவையும் மாயமாகியிருந்தன. பல இடங்களில் தேடியும் மனைவி குழந்தைகள் குறித்து தெரியாத நிலையில், போரூர் காவல்நிலையத்தில் கேசவன் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில்தான், கனகலட்சுமி, முல்லை விவேக்குடன் சென்றுள்ளது உறவினர் ஒருவர் மூலம் கேசவனுக்கு தெரியவந்துள்ளது. ஆண் நண்பருடன் வீட்டிலிருந்து வெளியேறிய மனைவி, தமது பெண் குழந்தைகளையும் அழைத்துச் சென்றுள்ளது கேசவனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நண்பனாக பழகிய முல்லை வேந்தன், நகை பணத்திற்காக தமது மனைவியை மூளைச்சலவை செய்து அழைத்துச் சென்றுவிட்டதாக கேசவன் குற்றம்சாட்டியுள்ளார். போலீசார் விரைவாக நடவடிக்கை எடுத்து, மனைவியையும், குழந்தைகளையும் மீட்டுத் தர வேண்டும் என அவர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

newstm.in

Tags:    

Similar News