ஒலிம்பிக்கில் 41 ஆண்டுகளுக்கு பின் சாதனை வெற்றி.. அசத்திய இந்திய ஆடவர் ஹாக்கி அணி !

ஒலிம்பிக்கில் 41 ஆண்டுகளுக்கு பின் சாதனை வெற்றி.. அசத்திய இந்திய ஆடவர் ஹாக்கி அணி !

Update: 2021-08-01 19:34 GMT

டோக்கியோ ஒலிம்பிக்கில் பிரிட்டன் அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இதன்மூலம் இந்திய ஹாக்கி அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த வெற்றியை வரலாற்று வெற்றி என்றே கொண்டாடலாம்.

இதன் மூலம் 1972 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியா ஒலிம்பிக்கில் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அதாவது, ஹாக்கியில் இந்திய அணி வீழ்த்தவே முடியாத அணியாக இருந்தது. 1928, 1932, 1936, 1948, 1952, 1956 என ஆறு ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ச்சியாக தங்கம் வென்றிருந்தது. ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா இதுவரை 29 பதக்கங்களை வென்றிருக்கிறது. அதில் ஹாக்கி அணியே அதிகபட்சமாக 11 பதக்கங்களை வென்று கொடுத்திருக்கிறது. இதில் 8 தங்கப் பதக்கங்களும் அடக்கம்.

இந்த நிலையில் இந்தாண்டு பெரும் தாக்கத்துடன் மன்ப்ரீத் சிங் தலைமயில் துடிப்புமிக்க இளம் அணியாக இந்திய அணி களமிறங்கியது. லீக் போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக விளையாடினர். இந்தநிலையில் பிரிட்டன் அணிக்கு எதிராக காலிறுதியில் இந்திய அணி களமிறங்கியது. இதில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இதன் மூலம் வரும் 3ஆம் தேதி அன்று இந்திய ஹாக்கி அணி பெல்ஜியம் அணி உடன் விளையாட உள்ளது. அதில் வெற்றி பெற்றால் ஹாக்கியில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதியாகும். 

 மாறாக தோல்வி பெற்றால் வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் விளையாட வேண்டி இருக்கும். எப்படியும் இந்திய ஆடவர் ஹாக்கி அணி இந்தாண்டு ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது உறுதி என பலரும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

newstm.in
 

Tags:    

Similar News