மவுத்வாஷ் ஆர்டர் செய்தவருக்கு `ரெட்மி நோட் 10’.. இன்ப அதிர்ச்சியில் துள்ளிகுதித்த இளைஞர் !
மவுத்வாஷ் ஆர்டர் செய்தவருக்கு `ரெட்மி நோட் 10’.. இன்ப அதிர்ச்சியில் துள்ளிகுதித்த இளைஞர் !
அமேசான் தளத்தில் 300 ரூபாய் மவுத்வாஷ் ஆர்டர் செய்தவருக்கு ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்திலும் வணிக இணைய விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டிலேயே இருக்கும் பலரும் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கி பொழுதை கழித்து வருகின்றனர். ஒரு சிலர் அன்றாட தேவையான பொருட்கள் வாங்குகின்றனர்.
இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த நபர் ஒருவர், அமேசான் தளத்தில் ரூ. 396 மதிப்புள்ள கோல்கேட் மவுத்வாஷ் ஒன்றை ஆர்டர் செய்தார். பின்னர் மறுநாள் அவருக்கு ஆர்டர் வந்தது. பார்சலை வாங்கி வீட்டிற்கு வந்து அதனை பிரித்துபார்த்தப்பின்னர் அவருக்கு அதிர்ச்சியுடன் மகிழ்ச்சியும் அதில் இடங்கியிருந்தது.
அதாவது பார்சலை திறந்து பார்த்ததும், அதில் ரூ. 13 ஆயிரம் மதிப்புள்ள 'ரெட்மி நோட் 10' ஸ்மார்ட்போன் இருந்ததை பார்த்து அந்த வாடிக்கையாளர் இன்ப அதிர்ச்சிக்குள்ளானர். தவறுதலாக வந்த ஆர்டரை ரிட்டர்ன் செய்யலாம் என்று பார்த்தால், மவுத்வாஷ் நுகர்வுக்குரிய தயாரிப்பு என்பதால் ரிட்டர்ன் செய்யும் ஆப்ஷன் கிடையாது.
இதையடுத்து அவர் இதனை அமேசானுக்கு ட்விட்டர் மூலம் தெரியப்படுத்தினார். தனக்கு வந்த பார்சலில் ஸ்டிக்கர் சரியாக இருப்பதாகவும், அதில் உள்ள கட்டண ரசீது வேறொரு வாடிக்கையாளருக்கானது என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்த சம்பவம் ட்விட்டரில் பதிவிடப்பட்டதை தொடர்ந்து, நெட்டிசன்கள் இந்த சம்பவத்தை வைரலாக்கி வருகின்றனர். பலர் இது குறித்து நக்கலடிக்கும் தகவல்களை பதிவிட்டு வருகின்றனர்.
newstm.in