பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு.. 60 பேருக்கு வேலை அளித்தது அரசு !
பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு.. 60 பேருக்கு வேலை அளித்தது அரசு !
பிச்சைக்காரர்கள் இல்லாத நிலையை உருவாக்கவும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் ராஜஸ்தான் அரசு பிச்சைக்காரர்கள் இல்லாத மாநிலத்தை உருவாக்க ‘கௌரவமான வாழ்வு’ என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் பிச்சைக்காரர்களுக்கு ஓராண்டு தொழிற்சி பயிற்சி கொடுக்கப்பட்டு, அந்த பயிற்சிக்கு ஏற்ப நிரந்தரமான தொழில் வாய்ப்பும் உருவாக்கிக் கொடுக்கப்படுகிறது.
ராஜஸ்தான் திறன் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு கழகம் மற்றும் சோபான் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் கல்லூரியும் இணைந்து இந்த முயற்சியை எடுத்துள்ளது. முதற்கட்டமாக, 60 பிச்சைக்காரர்களுக்கு, ‘கௌரவமான வாழ்வு’ திட்டத்தின் கீழ் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியை நிறைவு செய்துள்ள அவர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், அவர்கள் பெற்ற பயிற்சியின் அடிப்படையில் வேலைக்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
சிலர் ஜெய்ப்பூர் பகுதியில் இருக்கும் ரெட் பெப்பர்ஸ் என்ற ரெஸ்டாரண்டில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தங்களுக்கான பணியை அவர்கள் புரிந்து செய்யத்தொடங்கும்போது நிச்சயம் இந்த திட்டம் வெற்றிபெற்றதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
newstm.in