‘வலிமை’ படத்தின் ரிலீஸ் தேதி தமிழக அரசு கைகளில்..!

‘வலிமை’ படத்தின் ரிலீஸ் தேதி தமிழக அரசு கைகளில்..!

Update: 2022-01-25 12:47 GMT

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் உருவான ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படம் கடந்த 7-ம் தேதியே ரிலீசாக வேண்டிய நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.


இந்நிலையில், ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் வரும் மார்ச் 18-ம் தேதி அல்லது ஏப்ரல் 28-ம் தேதி ரிலீஸ் ஆகும் என்றும், இந்த இரண்டில் எது சரியான தேதி என்பதை படக்குழுவினர் இன்னும் ஒரு சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழு போலவே ‘வலிமை’ திரைப்படத்தின் படக்குழுவினரும் இரண்டு ரிலீஸ் தேதியை திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. ‘வலிமை’ திரைப்படம் பிப்ரவரி 25 அல்லது மார்ச் 4 ஆகிய இரண்டில் ஒன்றில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பிப்ரவரி 1-ம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவில் தளர்வு ஏற்படும் என்றும், குறிப்பாக திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் என்று தற்போது இருக்கும் நிலை மாறி 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசின் ஊரடங்கு உத்தரவில் தளர்வு அறிவிப்பை பொறுத்தே ‘வலிமை’ படத்தின் ரிலீஸ் தேதியும் உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News