அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 62 ஆக உயர்வு.. அரசு அதிரடி அறிவிப்பு..!

அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 62 ஆக உயர்வு.. அரசு அதிரடி அறிவிப்பு..!

Update: 2022-01-08 11:07 GMT

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60ல் இருந்து 62 ஆக உயர்த்தி ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது.

ஆந்திர மாநில அரசுத் துறையில், அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர் வரை பணியாற்றி வரும் லட்சக்கணக்கானோரின் சம்பள விகிதம், ஓய்வூதியர் பங்களிப்பு மற்றும் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது குறித்து அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


இதையடுத்து, அரசு ஊழியர்களுக்கான ஊதிய திருத்த ஆணையத்தின்படி, அடிப்படை ஊதியம் 23 சதவீதமாக உயர்த்தியும், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60ல் இருந்து 62 ஆக உயர்த்தியும் அறிவிப்பு வெளியிட்டார்.

இந்த நடைமுறை, ஜனவரி 2022-ல் இருந்து அமலுக்கு வரும் எனவும் அறிவித்தார். இதன் மூலம், அரசுக்கு 10,247 கோடி ரூபாய் கூடுதல் சுமை ஏற்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Similar News