நடுவானில் நாடு திரும்பிய விமானம்! காரணம் இதுதான்!!
நடுவானில் நாடு திரும்பிய விமானம்! காரணம் இதுதான்!!
ஷாங்காய் விமான நிலையத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றவில்லை எனக்கூறி, அமெரிக்கா விமானம் நடுவானிலேயே திரும்பி சென்றுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் புது வகையான ஒமைக்ரான் அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் தினசரி பாதிப்பு விறுவிறுவென அதிகரித்து வருகிறது.
அதனால் மீண்டும் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் அனைத்தும் வரிசையாக அமல்படுத்தப்படுகின்றன. இந்நிலையில்அமெரிக்காவை சேர்ந்த டெல்டா நிறுவனத்தின் விமானம், சியாட்டில் நகரில் இருந்து சீனாவின் ஷாங்காய் நகரம் நோக்கி புறப்பட்டது.
ஆனால் திடீரென அந்த விமானம் நடுவானிலேயே திரும்பி அமெரிக்காவிற்கே வந்தது. ஷாங்காய் விமான நிலையத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாததே விமானத்தை தரையிறக்காததற்கு காரணம் என டெல்டா நிறுவனம் கூறியுள்ளது.
இவ்விவகாரம் இரு நாட்டுக்கிடையிலான முரண்களோடும் ஒப்பிட்டு பார்க்கப்படுவதால் அரசியல் ரீதியாகவும் இது நாடு முழுவதும் விவாதங்களை பெற்றுவருகிறது. ஏற்கனவே அமெரிக்கா, சீனா இடையே தொடர்ந்து பிரச்னைகள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
newstm.in