ரிக்கி பாண்டிங் வீட்டில் கொள்ளை.. அவரது காரிலேயே கொள்ளையர்கள் தப்பினர் !

ரிக்கி பாண்டிங் வீட்டில் கொள்ளை.. அவரது காரிலேயே கொள்ளையர்கள் தப்பினர் !

Update: 2021-02-09 16:20 GMT

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றி ரிக்கி பாண்டிங்க்கு முக்கிய இடம் உண்டு. ஏனெனில் அவரது தலைமையில் ஆஸ்திரேலியா அணி இரண்டு முறை 50 ஓவர் உலகக் கோப்பையை வென்றது. இது ஒரு சாதனையாக அமைந்தது.

தொடர்ந்து பல்வேறு சாதனைகளையும் அவர் நிகழ்த்தியுள்ளார். தற்போது ஆஸ்திரேலியா அணியினருக்கு பயிற்சி அளித்து வருகிறார். இந்நிலையில் அவரது மெல்போர்ன் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் காரை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 5ஆம் தேதியன்று நுழைந்த திருடர்கள் செட்டில் நிறுத்தியிருந்த காரை கடத்தினர். இதனை அரிந்த ரிக்கி பாண்டிங் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கூறினார். அதனைத் தொடர்ந்து போலீசார் திருடப்பட்ட பாண்டிங்கின் காரை தேடும் முயற்சியில் இறங்கியுள்ளனர். 

பின்னர் அந்த காரை மெல்போர்னின் கேம்பர்வெல் பகுதியில் நின்றதை கண்டுபிடித்தனர். மேலும் போலீசாரை பார்த்ததும் அந்த காரில் இருந்த இருவர் தப்பிச் சென்றதாகவும் அவர்களை தேடி வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 
newstm.in

Tags:    

Similar News