சவாரி ரத்து.. பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பிய கால் டாக்சி ஓட்டுநர் !!

சவாரி ரத்து.. பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பிய கால் டாக்சி ஓட்டுநர் !!

Update: 2021-10-12 18:40 GMT

கால் டாக்சி புக் செய்துவிட்டு சவாரியை ரத்து செய்த பெண்ணுக்கு ஆபாச வீடியோக்களை இளைஞர் கைது செய்யப்பட்டார். 

இந்தியா முழுவதும் தற்போது கால் டாக்சி சவ்வாரி செய்வது அதிகரித்துவிட்டது. வீட்டில் இருந்தே புக் செய்யலாம், அதனை பயணத் திட்டத்தை கணக்கீடலாம், பயணச் செலவும் கையில் அடக்கம் போன்றவைகளே இதற்கு காரணம். 

அந்த வகையில், மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் மாமனாரின் பயணத்துக்காக ஒரு கால் டாக்சி நிறுவனத்தில் வாகனத்தை முன்பதிவு செய்தார். ஆனால் அந்த காரின் ஏசி பழுதடைந்தது மற்றும் அதிக கட்டணம் கேட்டதாக கூறி அப்பெண் தங்களின் புக்கிங்கை ரத்து செய்தார். 

இதற்கு பழிவாங்குவதற்காக கால் டாக்சி நிறுவனத்தில் பணியாற்றும் 18 வயதுடைய ஓட்டுநர் உத்சவ்குமார் பிரமோத் சுக்லா திட்டமிட்டார். அதன்படி, புக்கிங்கை ரத்துசெய்த அப்பெண்ணுக்கு போனில் தொந்தரவு செய்ததோடு, பல ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் வெவ்வேறு எண்கள் மூலமாக அனுப்பியுள்ளார். இதேபோல் அவரது கணவரக்கும் அனுப்பியதாக கூறப்படுகிறது. 

\இதனால் அத்தம்பதி போலீசாரிடம் இது குறித்து புகார் அளித்தனர். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த மும்பை லோக்மாண்ய திலக் மார்க் போலீசார், பீகாருக்கு தப்பி சென்ற அந்த ஓட்டுநரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

newstm.in

Tags:    

Similar News