விறுவிறுவென உயரும் வெங்காயம் விலை! மேலும் உயர வாய்ப்பு!

விறுவிறுவென உயரும் வெங்காயம் விலை! மேலும் உயர வாய்ப்பு!

Update: 2021-02-16 14:16 GMT

 

சென்னையில் சின்ன வெங்காயம் விலை ஒரு கிலோ ரூ.170க்கு விற்கப்படுவதால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்துள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பா், டிசம்பா் மாதங்களில் வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்தது. மொத்த விலையில் ரூ.80 வரையும், சில்லறை விற்பனையில் ரூ.100க்கும் விற்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சின்ன வெங்காயம் விலை படிப்படியாக உயர்ந்து தற்போது கிலோ 170 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

கோயம்பேடு சந்தைக்கு திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூா், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சின்ன வெங்காயம் கொண்டுவரப்படுகிறது. 

நாள்தோறும் வழக்கமாக 10 லாரிகளில் சின்ன வெங்காயம் வரும். ஆனால் சமீபத்தில் பெய்த மழை காரணமாக சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

 அதன் காரணமாக வரத்து குறைந்துள்ளது. இதே போல் வெளி மாநிலங்களில் இருந்து வரும் சின்ன வெங்காயத்தின் வரத்தும் குறைந்துள்ளது. தற்போது நான் ஒன்றுக்கு 5 லாரிகளில் சின்ன வெங்காயம் கொண்டு வரப்படுகிறது.

ஒரு மாதத்திற்கு பிறகு சின்ன வெங்காயத்தின் விளைச்சல் இயல்பு நிலைக்கு திரும்பும் என்பதால் அப்போது விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

தமிழகத்தை பொறுத்துவரை அதிகபட்சமாக சென்னையில் கிலோ ரூ.170-க்கும், குறைந்தபட்சமாக கோவையில் ரூ.120-க்கும் சின்ன வெங்காயம்  விற்பனையாகிறது.

newstm.in

Tags:    

Similar News