பெண் குழந்தைக்கு தந்தையானார் ஆர்.கே.சுரேஷ் !!
பெண் குழந்தைக்கு தந்தையானார் ஆர்.கே.சுரேஷ் !!
தமிழ் சினிமாவில் விநியோகஸ்தராக அறிமுகமானவர் ஆர்.கே.சுரேஷ். அதன்பிறகு தயாரிப்பாளர் ஆனார். தம்பிகோட்டை, சலீம், தர்மதுரை உள்பட பல படங்களை தயாரித்தார்.
பாலா இயக்கத்தில் சசிகுமார், வரலட்சுமி நடிப்பில் வெளியான தாரை தப்பட்டை படத்தில் வில்லனாக அறிமுகமானார். அதன்பிறகு மருது, இப்படை வெல்லும், ஸ்கெட்ச், காளி, பில்லா பாண்டி, புலிக்குத்தி பாண்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார் .
இந்நிலையில், மருத்துவமனையில் இன்று பிரசவத்திற்காக சுரேஷின் மனைவி அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது.மனைவியும், குழந்தையும் நலமாக இருப்பதாக ஆர்.கே.சுரேஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஆர்.கே.சுரேஷ்க்கு தமிழ்த் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
newstm.in