ரயில் நிலைய கவுன்ட்டரில் கொள்ளை – ஊழியர் நாடகமாடியது அம்பலம்!!

ரயில் நிலைய கவுன்ட்டரில் கொள்ளை – ஊழியர் நாடகமாடியது அம்பலம்!!

Update: 2022-01-04 09:46 GMT

சென்னை திருவான்மியூர் ரயில் நிலைய கவுன்ட்டரில் 1.32 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துவிட்டு நாடகமாடியது  ஊழியர் தான் என்பது அம்பலமாகியுள்ளது.

திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் நேற்று அதிகாலை டிக்கெட் கவுண்ட்டருக்குள் நுழைந்த மர்ம நபர்கள், துப்பாக்கி முனையில் தன்னை கட்டிப் போட்டுவிட்டு ரூ1.32  லட்சம் பணத்தைக் கொள்ளையடித்து சென்றதாக ஊழியர் புகார் தெரிவித்தார்.

தலைநகர் சென்னையில் புறநகர் ரயில் நிலையத்தில் நடந்த இக்கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்

எழும்பூர் ரயில்வே டிஎஸ்பி ஸ்ரீகாந்த் தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து திருவான்மியூர் ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாத நிலையில் அருகேயுள்ள சிசிடிவி கேமராக்களை ரயில்வே போலீசார் ஆய்வு செய்தனர். கொள்ளை நடந்ததாக கூறப்பட்ட அதிகாலை நேரத்தில் ரயில் நிலையத்திற்கு பெண் ஒருவர் வந்து சென்றது சிசிடிவி கேமராவில் பதிவானது.

அந்த பெண், ரயில்வே ஊழியர் டீக்காராமின் மனைவி என தெரியவந்தது. இதையடுத்து மனைவியுடன் சேர்ந்து ரயில்வே ஊழியர் டீக்காராம், ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 500 ரூபாயை கொள்ளையடித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

newstm.in

 

Similar News