திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே கப்பலுடையான் கிராமத்தில் செங்குட்டுவன்-சத்யா தம்பதி வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். செங்குட்டுவன் அடிக்கடி சத்யாவை வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்  - மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை வந்துள்ளது. வழக்கம் போல் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மீண்டும் சண்டை வந்துள்ளது.

கொஞ்சம் நேரத்தில் அந்த சண்டை கைகலப்பாக மாற, செங்குட்டுவன் மனைவி சத்யாவை கடுமையாக தாக்கி கொலை செய்து விட்டார் என்று கூறப்படுகிறது. சத்யா அங்கேயே இறந்து விட்டதால் பதறிப் போன செங்குட்டுவன் சத்யாவின் உடலை அப்புறப்படுத்துவதற்காக காரில் ஏற்றியுள்ளார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அளித்த தகவல் மூலம் அங்குச் சென்ற சத்யாவின் உறவினர்கள், செங்குட்டுவன் சத்யாவின் உடலை காரில் ஏற்றுவதைப் பார்த்ததால், அந்த காரை அங்கிருந்து நகர விடாமல் அடித்து நொறுக்கினர்.

உடனே அங்கு விரைந்து வந்த போலீசார் சத்யாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

newstm.in

Tags: