‘ரூட்டு தல’களுக்கு இனி காப்பு கன்பார்ம்.. போலீஸ் கமிஷனர் அதிரடி உத்தரவு..!
‘ரூட்டு தல’களுக்கு இனி காப்பு கன்பார்ம்.. போலீஸ் கமிஷனர் அதிரடி உத்தரவு..!
‘ரூட்டு தல’ பிரச்னையில் ஈடுபடும் மாணவர்கள் மீது இனி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை மாதவரம் பேருந்து நிலையத்தில் இன்று காலை தியாகராய கல்லூரி மற்றும் அம்பேத்கர் கல்லூரி மாணவர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. போலீசார் வருவதை கண்டதும் மாணவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
இருப்பினும், மோதலில் ஈடுபட்ட 7 பேரை சுற்றி வளைத்த போலீசார், அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 7 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதனிடையே, உயர்கல்வித்துறை செயலர் மற்றும் அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
அதில், ‘ரூட்டு தல’ பிரச்னையில் ஈடுபடும் மாணவர்கள் மீது இனி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பிரச்னைக்குரிய மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும். அவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என கடிதத்தில் சங்கர் ஜிவால் வலியுறுத்தி உள்ளார்.