சென்னை ரவுடி சுற்றிவளைத்து கொடூரக் கொலை.. காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை.!

சென்னை ரவுடி சுற்றிவளைத்து கொடூரக் கொலை.. காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை.!

Update: 2020-02-29 11:36 GMT

சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகரை சேர்ந்த திவாகரன் நேற்று முன்தினம் இரவு, காசிமேடு கடல் உணவு வியாபாரிகள் நல சங்கம் எதிரே சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனங்களில் வந்த 8 பேர் கொண்ட கும்பல், திவாகரனை மறித்து அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.

அந்த சிசிடிவியில் ரவுடி திவாகரனை சுற்றி வளைத்து வெட்டிக்கொலை செய்யும் பதைபதைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இது தொடர்பாக லோகேஷ், விமல், ஆண்டனி, ஸ்டீபன் , சரத், வேல்முருகன் ஆகிய 6 பேர் காசிமேடு காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளனர்.

இந்த கொலை குறித்து நுண்ணறிவு பிரிவு போலீசார் காவல் ஆய்வாளர் இசக்கி பாண்டியனிடம் எச்சரித்தும் அவர் கொலையை தடுக்க தவறியுள்ளார். இதனால் காசிமேடு ஆய்வாளர் இசக்கி பாண்டியனை ஆயுதப்படைக்கு அதிரடியாக இடமாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

newstm.in

Tags:    

Similar News