‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் வெளியீடு தேதி மீண்டும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. ரசிகர்கள் உற்சாகம் !!

‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் வெளியீடு தேதி மீண்டும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. ரசிகர்கள் உற்சாகம் !!

Update: 2022-01-31 19:15 GMT

எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் வரும் மார்ச் மாதம் 25ஆம் தேதி வெளியீடுவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்.’ . ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் எஸ்.எஸ்.ராஜமௌலி பிரமாண்டமாக பெரும் பொருட்செலவில் இயக்கியுள்ள படம் 'ஆர்.ஆர்.ஆர்'. இந்தப் படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது. 

இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏற்கனவே ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்து பெரும் வெற்றியை பெற்ற பாகுபலியை தொடர்ந்து அவரது இயக்கத்தில் வெளிவரும் அடுத்தப் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இதற்கிடையில் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம், கடந்த ஜனவரி 7ஆம் தேதி உலகம் முழுக்க திரையரங்குகளில் வெளியாக இருந்தது. இந்த நிலையில், கொரோனா மூன்றாவது அலை பரவல் ஏற்பட்டத்தின் படத்தின் வெளியீட்டை தள்ளிவைத்தது படக்குழு. மேலும், இரண்டு புதிய வெளியீட்டுத் தேதிகளையும் கடந்த 21ஆம் தேதி படக்குழு அறிவித்தது.

அதன்படி, நாட்டில் தொற்றுநோய் நிலைமை சரியாகி தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கும் அனுமதி கிடைத்தால் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தினை வரும் மார்ச் 18ஆம் தேதி வெளியிடுகிறோம். ஒருவேளை அப்போதும் வெளியிட முடியவில்லையென்றால் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியிடுகிறோம், என்று அறிவித்திருந்தது. 

இந்நிலையில், வரும் மார்ச் 25ஆம் தேதி ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.

newstm.in

Tags:    

Similar News