நீரஜ் சோப்ராவுக்கு ரூ.1 கோடி பரிசு.. சிஎஸ்கே அணி நிர்வாகம் செம அறிவிப்பு !!
நீரஜ் சோப்ராவுக்கு ரூ.1 கோடி பரிசு.. சிஎஸ்கே அணி நிர்வாகம் செம அறிவிப்பு !!
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ஒரு கோடி ரூபாய் பரிசு அறிவித்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்று இந்திய மக்களின் ஏக்கத்தை தனித்தவர் நீரஜ் சோப்ரா. ஈட்டி எறிதலில் அவர் தனது திறமையை வெளிப்படுத்தி தங்க பதக்கம் வென்றுள்ளார். அவருக்கு வாழ்த்துகளும் பரிசுகளும் மலைபோல் குவிந்து வருகிறது.
ராணுவத்தில் இளநிலை அதிகாரியாக உள்ள நீரஜ் சோப்ராவுக்கு இதன்மூலம் பதவி உயர்வு கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் நீரஜ் சோப்ராவுக்கு சிஎஸ்கே அணியின் கேப்டனும் ராணுவத்தில் கவுரவ அதிகாரியுமான எம்.எஸ்.தோனி வாழ்த்து தெரிவிப்பதாக அணியின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சாதனையை போற்றும்வகையில் ‘8758‘ என்ற எண்ணுடன்கூடிய சிறப்பு சீருடை வெளியிடப்படும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவருக்கு பரிசு தொகையாக ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் எனவும் சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுதவிர, ஏற்கனவே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் நீரஜ் சோப்ராவுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு அறிவித்துள்ளது.வெள்ளி வென்றவர்களுக்கு தலா 50 லட்சமும் வெண்கலம் வென்றவர்களுக்கு தலா 25 லட்சமும் பரிசுத் தொகை வழங்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Anbuden saluting the golden arm of India, for the Throw of the Century!
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) August 7, 2021
8️⃣7⃣.5⃣8⃣ 🥇🔥
CSK honours the stellar achievement by @Neeraj_chopra1
with Rs. 1 Crore. @msdhoni
Read: https://t.co/zcIyYwSQ5E#WhistleforIndia #Tokyo2020 #Olympics #WhistlePodu 🦁💛 📸: Getty Images pic.twitter.com/lVBRCz1G5m
newstm.in