பிரபல நடிகர் குறித்து துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு! காவல்துறை அறிவிப்பு !!

பிரபல நடிகர் குறித்து துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு! காவல்துறை அறிவிப்பு !!

Update: 2021-02-03 16:43 GMT

நடிகர் தீப் சித்து குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும், மேலும், நான்கு பேர் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ 50,000 பரிசும் வழங்கப்படும் என டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது.

டெல்லியில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 60 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு - விவசாயிகள் இடையே நடைபெற்ற 12 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. குடியரசு தினத்தில் விவசாயிகள் சார்பில், டெல்லியில் நடந்த டிராக்டர் பேரணி நடைபெற்றது. அப்போது நிகழ்ந்த வன்முறையில் விவசாயிகள்- போலீசார் இடையே மோதல் வெடித்தது.

அப்போது, டெல்லி செங்கோட்டைக்குள் நுழைந்த ஒரு சிலர், தேசியக் கொடி ஏற்றும் இடத்திலும், சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி பேசும் இடத்திலும் சீக்கிய மதக் கொடியை ஏற்றி வைத்தனர். இப்படி டெல்லியில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் ஏராளமான விவசாயிகளும்,  போலீசாரும் காயமடைந்தனர். 

இந்நிலையில் தீப் சித்து என்பவரும் ஜக் சிங், பூட்டா சிங், சுக்தேவ் சிங் மற்றும் இக்பால் சிங் ஆகிய நான்கு பேரும், செங்கோட்டைக்குள் சென்று தேசியக் கொடியை இறக்கி சீக்கிய கொடியை ஏற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் வன்முறைக்கு காரணமான நடிகர் தீப் சித்து மற்றும் பலரை தேடி வருகிறது.

இந்நிலையில், நடிகர் தீப் சித்து பற்றிய தகவல் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசும், மற்ற நான்கு பேர் குறித்து தகவல் அளித்தால் ரூ 50,000 பரிசும் வழங்கப்படும் என டெல்லி போலீசார் அறிவித்துள்ளனர். அவர்கள் கைது செய்யப்படும்பட்டத்தில் தேசதுரோக வழக்கு பாயும் என தெரிகிறது.

Tags:    

Similar News