ரூ.100 கோடி அளவுக்கு முறைகேடு! காவல்துறை மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி!

ரூ.100 கோடி அளவுக்கு முறைகேடு! காவல்துறை மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி!

Update: 2020-10-16 11:33 GMT

திருநெல்வேலியில் ரூ.100 கோடி அளவுக்கு மணல் கடத்தி விற்பனை செய்துள்ளதாக எழுந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் காவல்துறை மீது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் மணல் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், நிலத்தடிநீர் பாதிக்கப்படுவதுடன், சுற்றுச்சூழல் மாசும் ஏற்படுகிறது. இது தொடர்பாக பல முறை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் உரிய நவடிக்கை இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், இது தொடர்பான வழக்கு ஒன்றில் மணல் கடத்துபவர்களுக்கு முன்ஜாமின் கிடையாது என சென்னை உயர்நீதிமன்றக்கிளை அதிரடியாக உத்தரவிட்டது. அப்போதாவது மணல் கடத்தல் குறையும் என எதிர்க்கப்பட்டது. 

இந்த நிலையில், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்ட போது 30 அடி ஆழத்துக்கு கீழ் தளம் அமைக்க பெரிய பள்ளம் தோண்டப்பட்டது. 30 அடி ஆழம் வரை தோண்டப்பட்ட போது அதில் கிடைத்த ஆயிரக்கணக்கான யூனிட் மணலை முக்கிய புள்ளிகள் ஆதரவுடன் சிலர் கடத்தி விற்பனை செய்வதுள்ளதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மேலும், இந்த மணலை கேரளத்துக்கு கடத்தி விற்றதன் மூலம் சுமார் ரூ.100 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் வழக்கு தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய போலீசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, மணல் கடத்தல் தொடர்பாக திருநெல்வேலி போலீஸ்  விசாரணை அறிக்கை ஒன்றை தாக்கல் செய்திருந்தது. ஆனால், அது திருப்திகரமாக இல்லை என்று நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளனர்.  மேலும், மணல் கடத்தல் வழக்கு பற்றி உண்மையான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என  உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News