ஊரகப் பகுதிகளின் வளர்ச்சிக்காக ரூ.100 கோடி.. தமிழக அரசு அரசாணை வெளியீடு..!

ஊரகப் பகுதிகளின் வளர்ச்சிக்காக ரூ.100 கோடி.. தமிழக அரசு அரசாணை வெளியீடு..!

Update: 2021-12-20 12:42 GMT

தமிழக முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் சேலத்தில் நமக்கு நாமே திட்டம் மற்றும் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.

மக்களின் சுய சார்பு தன்மையை ஊக்குவிக்கவும், பலப்படுத்தவும், மக்களுக்கு தேவையான திட்டங்களை அவர்களது பங்களிப்புடன் செயல்படுத்தி, பொது சொத்துக்களை உருவாக்கிப் பராமரித்து வருவது நமக்கு நாமே திட்டத்தின் உயரிய நோக்கமாகும்.

இத்திட்டத்தின் மூலம் வளர்ச்சிப் பணிகளை திட்டமிடுதல், வள ஆதாரங்களை திரட்டுதல், பணிகளை மேற்கொள்ளுதல், மேற்பார்வை செய்தல் ஆகிய மக்கள் பணிகள் இருக்கும்.

மாநில அளவில் 300 கோடி மதிப்பீட்டில் நமக்கு நாமே திட்டம் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்படும். இத்திட்ட பணியானது குறைந்தபட்ச மூன்றில் ஒரு பங்கு பொதுமக்களின் பங்களிப்பு நிதி மற்றும் அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், ஊரகப் பகுதிகளில் மக்கள் பங்களிப்புடன் ரூ.100 கோடி மதிப்பிலான நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நவீன ஆய்வகங்கள் கட்டும் பணிகள் நமக்கு நாமே திட்டத்தில் மேற்கொள்ளப்படும். நமக்கு நாமே திட்டப்பணிகளுக்கான மதிப்பீட்டுத் தொகையில் மூன்றில் ஒரு பங்கு பொதுமக்களின் பங்களிப்பாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News