பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000: கெஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதி !

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000: கெஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதி !

Update: 2021-11-22 19:01 GMT

உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கிறது. டெல்லியில் ஆட்சியை பிடித்துள்ள ஆம் ஆத்மி கட்சி அடுத்ததாக உத்தரகாண்ட், பஞ்சாப் மாநிலத்திலும் வலுவாக காலூன்ற விரும்புகிறது.

இதனால் அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அடிக்கடி உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் மாநிலங்களில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். நேற்று உத்தரகாண்ட் சென்றிருந்த நிலையில், இன்று பஞ்சாப் சென்றுள்ளார்.
 


பஞ்சாப் மாநிலம் மோகாவில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், நாங்கள் 2022ஆம் ஆணடு பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி அமைத்தால், மாநிலத்தில் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் மாதந்தோறும் வழங்கப்படும். ஒரு குடும்பத்தில் மூன்று பெண்கள் இருந்தால், மாதந்தோறும் 3 ஆயிரம் பெறலாம். இது உலகின் மிகப்பெரிய பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் திட்டமாக இருக்கும்,  என்றார்.

மேலும் இந்த கூட்டத்தில் பஞ்சாப் முதல்வரை மறைமுகமாக விமர்சித்த அரவிந்த் கெஜ்ரிவால், "பஞ்சாபில் ஒரு போலி கெஜ்ரிவால் வலம் வந்துகொண்டிருக்கிறார். நான் இங்கு என்ன வாக்குறுதி அளித்தாலும், அதையே அவரும் திரும்ப அளிக்கிறார். நாட்டிலேயே கெஜ்ரிவால் என்ற ஒருவரால் மட்டும்தான் உங்களின் மின் கட்டணத்தைப் பூஜ்ஜியமாகக் குறைக்க முடியும். எனவே அந்த போலி கெஜ்ரிவால் குறித்து ஜாக்கிரதையாக இருங்கள், எனத் தெரிவித்துள்ளார்.

newstm.in

Tags:    

Similar News