கொரோனாவைக் கட்டுப்படுத்த ரூ.13,352 கோடி செலவு! பட்ஜெட் உரையில் துணை முதல்வர் தகவல்!

கொரோனாவைக் கட்டுப்படுத்த ரூ.13,352 கோடி செலவு! பட்ஜெட் உரையில் துணை முதல்வர் தகவல்!

Update: 2021-02-23 11:53 GMT

தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட்டை தற்போது துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பேசி வருகிறார்.

திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதால், பட்ஜெட் உரையை  வாசிக்க விடாமல் திமுகவினர் அமளியில் ஈடுபட்டு பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிப்பதாக அறிவித்து வெளிநடப்பு செய்தனர். 

இந்நிலையில், இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வரும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தனது உரையில், தமிழகத்தில் கொரோனா தொற்று மீட்டெடுப்பு நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு இதுவரையில் ரூ.13,352 கோடி அரசு செலவிட்டுள்ளது என்றார்.

மேலும், கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.6,683 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழக அரசின் கடன் சுமை தற்போது 4.85 லட்சம் கோடியாக உள்ள நிலையில், அடுத்த ஓராண்டில் 5.70 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்றும் இடைக்கால பட்ஜெட்டில் தெரிவித்தார்

Tags:    

Similar News