கட்டு கட்டாக சிக்கியது: மருந்து நிறுவனத்தில் ரூ.142 கோடி ரொக்கம் பறிமுதல் !!

கட்டு கட்டாக சிக்கியது: மருந்து நிறுவனத்தில் ரூ.142 கோடி ரொக்கம் பறிமுதல் !!

Update: 2021-10-09 21:05 GMT

ஐதராபாத்தில் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.142 கோடி ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வரி ஏய்ப்பு, சொத்கு குவிப்பு புகார் அடிப்படையில் நாடு முழுவதும் கண்காணித்து வருமான வரித்துறை அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் ஐதாபாத்தில் உள்ள பிரபல மருத்து தயாரிக்கும் நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தியது. இதில் கட்டுகட்டாக பணம் சிக்கியது அதிகாரிகளையே அதிர்ச்சி அடையச் செய்தது.  

இது தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரிய ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: கடந்த 6 ம் தேதி ஐதராபாத்தைச் சேர்ந்த மருந்து நிறுவனங்களுக்கு சொந்தமாக 6 மாநிலங்களில் உள்ள 50 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் ரூ.142 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இதுவரை, கணக்கில் வராத ரூ.550 கோடி வருமானத்தை அந்த நிறுவனம் மறைத்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது, இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

newstm.in

Tags:    

Similar News