ஆர்யன்கானை விடுவிக்க ரூ.18 கோடி பேரமா? வெளியான பரபரப்பு தகவல் !!

ஆர்யன்கானை விடுவிக்க ரூ.18 கோடி பேரமா? வெளியான பரபரப்பு தகவல் !!

Update: 2021-10-24 21:13 GMT

கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் பறிமுதல் செய்த வழக்கில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையில் இருந்து கோவா மாநிலத்திற்கு சென்ற சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்ட விவகாரம் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கடந்த 3ம் தேதி சென்ற சொகுசு கப்பலில் போதை விருந்தில் பங்கேற்ற நடிகர் ஷாரூக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட பலரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். 

இந்த வழக்கில் ஆர்யன் கான் தாக்கல் செய்த ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஜாமீன் மறுக்கப்பட்டதை தொடர்ந்து, மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். இந்த வழக்கில், தனியார் புலனாய்வாளர் கே.பி.கோசவி மற்றும் அவரது உதவியாளர் பிரபாகர் செயில் ஆகியோர் சாட்சியாக சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில், சாட்சியமாக சேர்க்கப்பட்ட பிரபாகர் செயில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி பரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இது குறித்து பிரபாகர் செயில் கூறுகையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தன்னிடம் 9 முதல் 10 வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கினர். அதேபோல் என்.சி.பி அதிகாரிகள் மற்றும் மேலும் சிலரும் ஆர்யன் கான் வழக்கு தொடர்பாக அவரது தந்தை ஷாருக்கானிடம்  பேரம் பேசினர், ஒரு தொகை கைமாறியது என்று எனக்கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

இதனிடையே, பிரபாகர் செயில்  சிறப்பு நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில் இதில் இருக்கும் தகவல்கள் வெளிவந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த தகவலின்படி, சாம் டிசோசா என்பவருடன் கொசாவி காரில் செல்லும்போது போனில் பேசினார். அப்போது ரூ.25 கோடி கேளுங்கள் என்றும் அதனை 18 கோடியில் முடித்துக்கொள்ளலாம் என்று கொசாவி தெரிவித்தார். நாம் சமீருக்கு ரூ.8 கோடி கொடுக்கவேண்டியிருக்கிறது என்றும் தெரிவித்தார். அதே நாளில் மாலையில் சாம் டிசோசா, கொசாவி மற்றும் ஷாருக்கான் மேலாளர் பூஜா ஆகியோர் காரில் சந்தித்து 15 நிமிடம் பேசினர். 

என்னிடம் குறிப்பிட்ட இடத்தைச் சொல்லி அங்கு சென்று பணத்தை வாங்கி வரும்படி கேட்டுக்கொண்டனர். நான் வெள்ளைக்காரில் வந்தவர்களிடம் பணம் இருந்த இரண்டு பேக்கை வாங்கி வந்து கொடுத்தேன். அதனை காரில் வைத்து எண்ணிப்பார்த்த போது 38 லட்சம் இருந்தது, என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் என கூறப்படுகிறது. 
பிரபாகர் செயிலின் இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளனர். 

மேலும், விசாரணை அமைப்பின் பெயரை கெடுப்பதற்காக இந்த குற்றச்சாட்டு கூறப்படுகிறது. அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா உள்ளது. அதனால், அது போன்ற குற்றச்சாட்டுகள் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Tags:    

Similar News