தமிழக அரசுக்கு ரூ.2 கோடி நிதியுதவி.. பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தாராளம் !!
தமிழக அரசுக்கு ரூ.2 கோடி நிதியுதவி.. பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தாராளம் !!
தமிழகத்தில் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக லைக்கா நிறுவனம் 2 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது.
லைக்கா திரைப்பட தயாரிப்பு நிறுவனம் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழிலில் கத்தி, 2.ஓ உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை தயாரித்துள்ளது. இந்த நிலையில் லைகா நிறுவனம் தமிழகத்திற்கு கொரோனா நிவாரண நிதி அளித்துள்ளது. லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் கடந்த ஆண்டு ஏற்கனவே கொரோனா தடுப்பு பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அளித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்த லைக்கா நிறுவனத்தின் நிர்வாகிகள் தமிழ்க்குமரன், நிருதன் மற்றும் கவுரவ் ஆகியோர் சுபாஷ்கரன் சார்பில் 2 கோடி ரூபாய் நிதியுதவியை நேரில் வழங்கி உள்ளனர்.
லைக்கா நிறுவனம் தற்போது தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2 படத்தை தயாரித்து வருகிறது.
ஏற்கனவே தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் நிதியுதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Newstm.in